Sunday, 15 November 2015

டிசம்பர் 20 அன்று வேலூ‌ர் மாவ‌ட்ட‌ம் சோளிங்கரில் நடைபெறவுள்ள மலரட்டும் மனிதநேயம் விழாவினை முன்னிட்டு சோளிங்கர் ஒன்றிய ரசிகர்களின் செயற்குழு கூட்டம் இன்று (15.11.15, ஞாயிறு) சி.ராமமூர்த்தி மஹாலில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சோளிங்கர் என். இரவி அவர்கள் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் மலரட்டும் மனிதநேயம் விழா சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் நடைபெற ஒற்றுமையுடன் செயல்படுவோம் என்று சோளிங்கர் ஒன்றிய ரசிகர்கள் சபதமேற்றனர்.
மேலும், விழாவின் ஏற்பாடுகள், பொதுமக்கள், ரசிகர்கள், சிறப்பு விருந்தினர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கடும் மழையையும் பொருட்படாமல் சோளிங்கர் ஒன்றிய ரசிகர்கள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய பொருப்பாளர்கள் மற்றும் உட்பட 1500 நபர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.  என்.முருகன் நன்றி கூறினார்.


No comments:

Post a Comment